இந்தியா

இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை பெற்றுத்தர அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தை அடுத்த ஓமலூரில் நேற்று புதன்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழ்கின்ற எந்த மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இலங்கை தமிழர்களை பொறுத்தவரை, 2016 தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்தார். அவரது மறைவிற்குப் பிறகு, நானும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தியபோது, அதிமுக சார்பில் பேசிய மேலவை உறுப்பினர்களும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்.

எங்கள் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக பேசியிருப்பது குறித்து கேட்கிறார்கள். அவர் கொறடாவிற்குத்தான் கட்டுப்படுவார். கொறடாவை மீறி செயல்பட்டால் அவர் பதவி இழக்க நேரிடும் என்பதுதான் முறை. ஆனால், ஏதோவொரு வார்த்தையை வைத்துக் கொண்டு அவர், எதிர்த்ததாக கூறுகின்றனர். அவரிடம் நேரில் கேட்டால் மட்டுமே எங்களுக்கு விளக்கம் தெரியும். இது கட்சியின் சொந்தப் பிரச்னை. இலங்கை தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தருவதற்கு அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் 107 அகதி முகாம்கள் உள்ளது. 25 மாவட்டங்களில் 59,714 பேர் வசிக்கின்றனர். மேலும், 34,355 பேர் வெளியில் வசிக்கிறார்கள். தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க., பா.ஜ.க. தே.மு.தி.க.வினர் எதிராகப் போட்டியிடவில்லை. வாபஸ் பெறுவதற்கு நேரமுள்ளது. எங்களுடைய கூட்டணி ஒருமித்தக் கருத்தோடு தேர்தலை சந்திக்கும். எதிர்க்கட்சிகள் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.