இந்தியா
Typography

“அரசு அடக்குமுறையை கையாள்வதன் மூலம், இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்கிறது; தேசத்தின் குரலை ஒடுக்கப்படுகிறது, தொலைபேசி, இணைய தளம், மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதன்மூலம் அமைதியான போராட்டங்களைத் தடுக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தில்லியில் பல மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘கல்லூரிகளை மூடுவதற்கும் தொலைபேசி சேவைகள், இணையதளத்தை முடக்கவும் மெட்ரோ ரயில்களை நிறுத்தவும், இந்தியாவின் குரலை அடக்கி ஒடுக்கவும் அமைதியான போராட்டங்களைத் தடுப்பதற்கும் பிரிவு 144 -ஐ விதிக்க இந்த அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவ்வாறு செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு பெரும் அவமானம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்