இந்தியா

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியாவின் தமிழகத்தைத் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

மணமேல்குடி அருகே 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.