இந்தியா

திங்கட்கிழமை இரவு டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் சிறிய அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் இரவு 7.25 மணியவில் தீ ஏற்பட்டதாகத் தகவல் உடனே பரவியதை அடுத்து கிட்டத்தட்ட 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை உடனே அணைத்தனர்.

இது சிறியளவிலான தீ விபத்துத் தான் என்றாலும், பிரதமர் இல்லம் என்பதால் தான் 9 வண்டிகளில் வீரர்கள் விரைந்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் சில நிமிடங்களுக்குள் தீ முற்றிலும் அணைக்கப் பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் எப்பகுதியில், முதலில் எப்படித் தீ விபத்து ஏற்பட்டது போன்றவற்றை அறிவதற்காக விசாரணை ஆரம்பிக்கப் பட்ட போதும் இன்னும் இது தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.

அண்மையில் தான் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் கங்கைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடி சென்ற போது கங்கைத் தீரத்தில் உள்ள படிக்கட்டில் தவறுதலாகத் தடுமாறிக் கீழே விழுந்தது வீடியோக்களில் பதிவாகிப் பரபரப்பான செய்தியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.