இந்தியா

நீர், ஆற்றல், உணவு மற்றும் தாதுக்கள் நிறைந்த கடல் வளங்களை நாம் ஆராய்ந்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் இன்று வெள்ளிக்கிழமை இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்.

அங்கு அவர் பேசியதாவது, “புதிய ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சியானது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்புடையதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன பெங்களூருவில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 2020ஆம் ஆண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நேர்மறை, நம்பிக்கையுடன் தொடங்கும்போது, நமது கனவை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியை எடுக்கிறோம்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை குறியீட்டில், இந்தியா 52வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில், முந்தைய 50 ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளில் அதிக தொழில்நுட்ப மையங்கள் உருவாகியுள்ளது. இதற்கு மத்திய அரசின் திட்டங்களே காரணம். இந்த சாதனைக்காக விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.

விண்வெளி துறையில் நாம் பெற்ற வெற்றியானது, ஆழ்கடலில் பிரதிபலிக்க வேண்டும். நீர், ஆற்றல், உணவு மற்றும் தாதுக்கள் நிறைந்த கடல் வளங்களை நாம் ஆராய்ந்து வரைபடமாக்கி பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் வெற்றியை பொறுத்து, இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. இதற்காக இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை மாற்ற வேண்டும்.

கண்டுபிடிப்பு, காப்புரிமை, உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இளம் விஞ்ஞானிகள் தாரக மந்திரமாக வைக்க வேண்டும். இந்த நான்கும்தான் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லும். நாம் புதியவற்றை கண்டுபிடிக்கும்போது, அதனை நாம் அதற்கு காப்புரிமை பெறுவோம். அதன் மூலம் உற்பத்தி சுமூகமாக நடக்கும். இதனை நாம் மக்களிடம் கொண்டு செல்லும் போது, வளர்ச்சி பெறுவோம்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.