இந்தியா

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சரிவை காட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யவாணி முத்துநகர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: “இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகாரிகள் நடக்கிறார்கள். இதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட முடிவு செய்தோம். இந்தநிலையில், அதிகாரிகள் இந்த பிரச்னையில் கவனம் செலுத்துவதாக கூறியதையடுத்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். ஆனால், தொடர்ந்து குடிசைகளை அகற்ற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். டோக்கன் வழங்குவதில் உள்ள ஊழல், முறைகேடுகளை களைய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சரிவையே காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியை விட கூடுதலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளது. குடியுரிமை திருத்தசட்டத்திற்கு அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததன் மூலம் இன்றைக்கு நாட்டின் மிகப்பெரிய கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பின் மூலம் மக்களின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.