இந்தியா

நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளமைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தனது உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதையடுத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள். தமிழக மக்களுக்கு இந்தாண்டு அமைதியையும் முன்னேற்றத்தையும் வழங்க வாழ்த்துகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் ஆட்சியை தொடர்கிறார். தமிழகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 18 பெரிய மாநிலங்களுள் தமிழகம் அரசு நிர்வாகத்தில் முதலிடம் பிடித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம். 'இந்தியா டுடே' ஆய்விலும் தமிழக அரசு முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த சாதனைகளுக்காக முதல்வர் பழனிசாமியை வாழ்த்துகிறேன்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற 9 மாவட்டங்களுக்கும் நகராட்சிகளுக்குமான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.

சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக, அத்திவரதர் வைபவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா, இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுர சந்திப்பு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு முறையாக செய்யப்பட்டிருந்தது" என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.