இந்தியா
Typography

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட், சூப்பர் பணக்காரர்களுக்கும், தொழில்துறையினருக்குமானது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

2020-2021ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்., 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக 40 பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மோடி அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் பணக்கார தொழில்துறை நண்பர்களுக்கான மோடியின் மிக விரிவான பட்ஜெட் ஆலோசனை. நமது விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு மற்றம் பொதுத்துறை ஊழியர்கள், சிறு தொழிலதிபர்கள் அல்லது நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் ஆகியோரின் கருத்துக்கள் அல்லது நலன் பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ள ராகுல், அத்துடன் #SuitBootBudget என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS