இந்தியா

எதிர்வரும் டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும் டில்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டில்லி சட்டசபைக்கு பிப்.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.11இல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தேசிய கட்சிகள் சுறுசுறு காட்டி வருகின்றன.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்துபோட்டியிட போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டி, “வரப்போகும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணிக்காக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை.“ என்றார்.