இந்தியா
Typography

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமுலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது. 

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமானது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்