இந்தியா

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த மாதம் முதல்வாரத்தில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜகபக்‌ஷ ஏற்கனவே பலமுறை இந்திய விஜயம் மேற்கொண்டிருந்தாலும், அவர் புதிய பிரதமராகப் பொறுப் பேற்பேற்றுக் கொண்டதன் பின் மெற் கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.இதன் போது அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்கவும், இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பான தீர்வுகள் தொடர்பில் உரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவை தவிர இருநாட்டுத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசவுள்ளதாகவும், இவற்றுக்கான முற் கூட்டிய பேச்சுவாரத்தைகள் இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியவருகிறது.