இந்தியா
Typography

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் அவரது வருகை அமையலாம் எனவும், வருகை குறித்த திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆயினும் அவரது வருகைக்கு முன்னதான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலான, ஆய்வுகளுக்கான அதிகாரிகளும், பாவனைத் தளபாடங்களும் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கிலப் புத்தாண்டினையொட்டி, பாரதப் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாபதிக்கு, தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்த போதே, இந்திய வருகைக்கான அழைப்பினை பிரதமர் டிரம்பிடம் வைத்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டே அவர் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தாகவும் அறியப்படுகிறது.

அமெரிக்கத் தலைவரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இணைய வணிகம் தொடர்பிலான உடன்படிக்கைகள், என்பன குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் எனவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்