இந்தியா
Typography

செவ்வாய்க்கிழமை போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வீதியில் குவித்து வைத்து பொருட்கள் எதிர்த்ததால் சென்னையில், டெல்லிக்கு இணையாக காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். சென்னையில் பழைய பாய்கள், துணிகள் மாத்திரமன்றி வாகனங்களின் டயர்களையும் சிலர் எரித்தது கவலைக்குரிய அம்சமாகப் பார்க்கப் படுகின்றது.

இதன் காரணமாக மார்கழிப் பனிக்கு இணையாக சென்னையில் புகை மூட்டமாகக் காணப்படுகின்றது. இக்காற்று மாசின் அளவு அதிகபட்சமாக சென்னை மணலியில் 795 குறியீடாகவும், அண்ணாசாலையில் 272 குறியீடாகவும், வேளச்சேரியில் 100 ஆகவும் பதிவாகியுள்ளது. சுவாசத்துக்கு உகந்த காற்று மாசின் அளவு 50 இல் இருந்து 100 இற்குள் தான் என்பதால் சென்னையில் அதிகாலையில் ஜோகிங் சென்றவர்கள் மற்றும் பாதசாரிகள் சுவாசிக்க சிரமப்பட்டார்கள்.

இதைவிட சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் காரணமாக 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொச்சி செல்லும் ஒரு விமானப் பயணம் ரத்தானதுடன், விமான நிலையத்தைச் சுற்றிப் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியும் உள்ளனர்.

முன்னதாக டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தைத் தாண்டிய சமயத்தில் ஆக்ஸிஜனை பொது மக்கள் சிலர் விலை கொடுத்து வாங்கியது நினைவில் இருக்கலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS