இந்தியா
Typography

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசின் தீர்மானத்தை, கேரள ஆளுனர் நிராகரித்த நிலையில், கேரள அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டினை நாடியுள்ளது.

இந்த விவகாரம், கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில், அதிருப்தியான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இந் நிலையில், கேரள ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களது பிரச்சனைக்கான விளக்கங்கள் அளித்த போதும், அவர்கள் அதனையும் மீறி, சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றிருப்பது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் ஆகும். அவர்கள் அவ்வாறு செல்ல முடியுமா என்பதை நான் ஆராய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்