இந்தியா
Typography

சந்திரயான்-3ற்கான திட்ட பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; அறிவியல், பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், என்பவை குறித்து அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு ஆர்வங்களும், இலக்குகளும் உள்ளன. இந்தியாவில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் "ககன்யான்" திட்டம், மேற்குறித்த இலக்குகள் அனைத்திற்குமான சரியான ஒரு தளத்தினை ஏற்படுத்தும்.

1984ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணம் செய்துள்ளார். ககன்யான் திட்டத்திற்காக இந்தியாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த மாத இறுதியில் அவர்கள் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவர். பயிற்சியின் பின், இந்த வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்வார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்