இந்தியா
Typography

வருடாந்த உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா கடந்த வருடத்தை விட 10 இடங்கள் பின்னடைந்து 51 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வில் இந்திய தேசத்தில் மக்களது உரிமைகளைப் பறிப்பது அதிகரித்திருப்பதே காரணம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஜனநாயகக் குறியீடானது தேர்தல் செயன்முறை, பன்மைத்துவம், அரசாங்கத்தின் செயற்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

இந்தக் குறியீட்டில் 9.87 மதிப்பெண்களுடன் நோர்வே முதலிடத்திலும், 1.08 மதிப்பெண்களுடன் வடகொரியா கடைசி இடத்திலும் உள்ளன. சீனாவின் மதிப்பெண் 2.26 ஆகக் குறைந்து தற்போது அது 153 ஆவது இடத்திலுள்ளது. தாய்லாந்து 2018 ஐ விட 1.69 புள்ளிகள் அதிகரித்து 6.32 மதிப்பெண்களுடன் 38 இடங்கள் முன்னேறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பின்னடைந்ததற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் மாற்றங்கள் மற்றும் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை சர்ச்சைக்குரிய முறையில் செயற்படுத்தியது என்பவை கூறப்படுகின்றது. அசாமில் இந்த என் ஆர் சீ பட்டியலில் இருந்து பெரும்பான்மை முஸ்லிம்கள் அடங்கலாக 19 இலட்சம் பேர் விலக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் சிலி, பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகிய 3 நாடுகள் பின்னடைவுப் பட்டியலில் இருந்து முழு ஜனநாயகப் பட்டியலுக்கு நகர்ந்தும் மால்ட்டா முழு ஜனநாயக நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேறி ஜனநாயகப் பின்னடைவுப் பட்டியலில் இடம்பிடித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்