இந்தியா
Typography

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு 130 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதுடன் நோய்த் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 6000 ஐத் தாண்டியும், ஏறக்குறைய சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் இத்தொற்று சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப் படுகின்றது.

சீனா தவிர பிற நாடுகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்ற போதும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பெங்களூரில் 19 பேர் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளதாகவும், இதில் 8 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கர்நாடக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வரக்கூடிய அனைத்துப் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.

மறுபுறம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புத் தீவிரமடைந்துள்ளதால் அங்கு செல்லும் தனது அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு குறித்த விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இனி வரும் நாட்களில் சீனாவிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகள் இந்த விமான இயக்கம் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆயினும் பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க சீனாவை விட்டு வெளியேறு மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் விமானத்தை இயக்கவும் வாய்ப்புள்ளது எனவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா போன்ற விமான சேவை நிறுவனங்களும், சீனாவுக்குச் செல்லும் தமது விமான சேவைகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா நோய்த் தொற்று ஆரம்பித்த வுஹான் நகரில் உள்ள அறிவியல் தொழிநுட்பப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று வந்த 8 இந்திய மாணவர்கள் நாளுக்கு நாள் அங்கு உணவும், குடிநீரும் அருகி வருவதால் தம்மை உடனே மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இந்தியர்களை மீட்க போயிங் 747-400 ரக விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்