இந்தியா
Typography

இந்திய மாநில முதல்வர்களில் அனைவரது கவனமும் பெற்று வருகின்றார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான மாற்றங்கள் ஆந்திராவில் நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு அரசு வேலை, ரே‌ஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக வழங்குதல், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊக்கத் தொகை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை, என்பன இவர் தனது ஆட்சியில் கொண்டு வந்த அதிரடியான திட்டங்கள். இவற்றுக்கு ஆந்திர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அவர் மற்றுமொரு திட்டத்தினை அறிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒய்வுதியம் பெறுபவர்களுக்கான பென்சன் தொகையினை, வரும் 1-ம் தேதி முதல் வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளார். இது வயோதிபர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் எனக எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 39 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில், தகுதியான மேலும் பலரை இத் திட்டத்தில் இணைத்துள்ளார்கள். இதனால் 54 லட்சத்து 64 ஆயிரம் பயனாளிகள் வரும் 1ம் திகதியிலிருந்து பயன் பெறவுள்ளார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS