இந்தியா
Typography

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை ஆரம்பித்து ஒராண்டினை எட்டியுள்ளது. இந்த ஒராண்டு காலத்தில், இந்தச் சேவையின் பயன்படுத்திய பயணிகள் தொகை சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த இந்தத் திட்டம் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கவில்லை ஆயினும், தற்போது பெரும் வரவேற்பினைப் பெற்று வருவதாகவும், பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பயணம் செய்வதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நேரத்தில் எதிர்பார்த்த அளவு வருவாய் ஈட்டவில்லை என்றும், பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது மக்களிடையே படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்