இந்தியா
Typography

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்ட விமர்சனக் கூட்டுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மார்ச் 2020 வரை நடத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதனை ஜனநாயக நடைமுறைகளிலேயே இந்தியா கொண்டு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நியாயமாக நடந்து கொள்ளும் என இந்திய அரசு தரப்புகள் தெரிவித்திருந்த நிலையில், இந்த வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது ஒருவகையில், இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி என அரசு வட்டாரங்களும், அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இத்தீர்மானம் குறித்த விவாதத்தின் போது, ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமாகிய மைக்கேல் காலெர், இந்தியாவும் இந்த தீர்மானத்தில் பங்கேற்பின் சிறப்பாக இருக்கும் என்னும் கருத்தினைப் பிரஸ்தாபித்தார். இந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவும் இதிழலே பங்கு கொள்ளும்விதமாக வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்காக மார்ச் 13-ம் தேதி பிரஸ்ஸல்ஸ் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இது விடயத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் பின்னதாக வாக்கெடுப்பு நடத்துவது குறித்து தீர்மானிக்கபடலாம் எனவும், அதற்கு அமைவாகவே தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS