இந்தியா
Typography

டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின் போது, அங்கு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், மாணவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

அங்கிருந்த காவல்துறையினர் துப்பாக்கிதாரியை சுற்றி வளைத்து கைது செய்தனர். காயம் அடைந்த மாணவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. அவருக்கு இடது கையில் ஏற்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நொய்டாவைச் சேர்ந்த 19 வயதுடைய கோபால் சர்மா எனக் கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.

அவர் குறித்த மேலதிக விபரங்களைப் பெறுவதற்கான விசாரணையை காவலதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்துவதற்கு முன்னதாக அது தனது இறுதிப்பயணம் என பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் லைவ் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பேஸ்புக் கணக்கு தற்போது முடக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும். வன்முறைக்கு இடமேதுமில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS