இந்தியா
Typography

தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடந்த காலங்களைப் போலவே நடத்தப்பட இருப்பதாக, இந்துசமய அறநிலையத்துறை வழங்கிய அறிக்கை அடிப்படையில், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட இயலாது எனக் கூறி, தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்குகளை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கினை தமிழில், தமிழ் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, ராமநாதபுரம் திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலரினால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறையால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், குடமுழுக்கு நாளில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, கடந்த காலங்களைப் போலவே நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள்.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடந்த காலங்களைப் போலவே நடத்தப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருப்பதால், நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக் கூறி குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்குகளை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS