இந்தியா
Typography

டெல்லியில் மாணவி நிர்பயாவை கூட்டாகப் பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்து வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று விதிக்கப்பட இருந்த தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாகக் காணப்பட்ட முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இந்தத் தண்டனை சுப்ரீம் கோர்ட்டாலும் உறுதி செய்யப்ட்டு, இன்று பெப்ரவரி 1ந் திகதி தூக்கிலிடுவதற்கான மரண வாரண்டும் பிறப்பித்திருந்தது.

அதன்படி நால்வரையும் தூக்கிலிடுவதற்கான பணிகள் திகார் ஜெயிலில் ஆரம்பமாகின. திகார் ஜெயிலில் தூக்கு போடும் ஊழியர் இன்மையால் உத்தரபிரதேச மாநில மீரட் ஜெயிலில் பணிபுரியும் ஊழியர் பவன்ஜலந்த் என்பவர் இதற்காக திகார் ஜெயிலுக்கு வரவழைக்கபட்டுள்ளார்.

இந்நிலையில் நான்கு குற்றவாளிகளில் அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா ஆகிய இருவரும், டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் “ நாங்கள் இருவரும் சட்டம் அனுமதித்துள்ள சலுகைகளை இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. எங்கள் தரப்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே மரண வாரண்டை ரத்துசெய்து, 1ந் திகதி தூக்கிலிஐவதைத் தடை செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இவர்களை தூக்கிலிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், இன்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட இருந்த நால்வருக்குமான தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாத் தெரியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS