இந்தியா
Typography

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கிருந்த இந்தியர்களின் ஒரு பகுதியினர் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதுவரையில் சீனாவில் மட்டும், 11 ஆயிரத்து 791 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ள நிலையில், வைரஸ் தாக்குதல் ஆரம்பமாகிய வுஹான் பகுதியில் சிக்கியிருந்த 400க்கும்அதிகமான இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை, இந்திய அரசு மேற்கொண்டது. இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 747 வகை விமானம், சிறப்பு மருத்துவக் கருவிகளுடன், நேற்று டெல்லியில் இருந்து சீனாவிற்குச் சென்றது.

இந்த விமானத்தில், 324 இந்தியர்கள் பத்திரமாக அழைத்துவரப்ட்டுள்ளார்கள். இவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றதும், 14 நாட்களுக்கு பிரத்யேக மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எதுவித நோய் தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கான பிரத்யேக மருத்துவ முகாம்களும் டெல்லி மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் தயார்நிலையிலுள்ளன என இந்தி மத்திய சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் எஞ்சியுள்ள இந்தியர்களை ஏற்றி வருவதற்கான இரண்டாவது விமானம் இன்று புறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS