இந்தியா
Typography

கடந்த இரண்டு வருடங்களில் ஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 இலட்சம் உயர்ந்துள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை (பட்ஜட்) அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

* 2006-2016க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.
* ஆரோக்கியமான வர்த்தகத்தை குறி வைத்து அரசு செயல்படுகிறது.
* ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகும்.
* ஜிஎஸ்டி போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் துறையில் செயல்திறனை அதிகரித்து உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பயனளித்துள்ளது. ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது.
* மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பயன்கள் நேரடியாக செல்கிறது
* தற்போது 40 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் கோடி நன்மை கிடைத்துள்ளது.
* ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது.
* பொருளாதார ரீதியாக நாட்டை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ஒருங்கிணைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கட்டமைத்தவர் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
* ஜி.எஸ்.டி. அமலுக்குப் பின்னர் குடும்ப செலவினங்கள் 4 சதவீதம் குறைந்துள்ளது. 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது.
* எனது பட்ஜெட் 2020 மூன்று கருப்பொருள்களைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான இந்தியா; அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி; மனிதாபிமான மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் ஆகும்.
* 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது-
* பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.
* ரெயில்வே சார்பில் விவசாயிகளுக்கான இரயில் சேவை உருவாக்கப்படும்; விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பிலும் விவசாயிகளுக்கான விமான சேவை தொடங்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
* விரைவில் அழுகக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உதான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS