இந்தியா
Typography

‘2020-21க்காக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் ஏதுமில்லை. அதுவொரு வெற்று பட்ஜெட்’ என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

மக்களவையில் இன்று சனிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “வேலைவாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சினையாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான எந்த முக்கிய யோசனையும் பட்ஜெட்டில் இல்லை. மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது இருந்திருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை வெற்று அறிக்கையாகவே உள்ளது” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS