இந்தியா
Typography

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கான எதிர்ப்புப் போராட்டங்கள், பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு, போராட்டங்கள் மீதான அராஜகம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தோழமை கட்சிகளுடன் இணைந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைத்தடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இன்று காலை சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், வீதி வீதியாகச் சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றார்.திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இயக்கத்தை இன்று ஆரம்பித்தனர்.

இன்று ஆரம்பமான இந்தப் போராட்டம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் 8ந் திகதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடை வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கையெழுத்து முகாம்கள் அமைக்கப்பட்டு, கையெழுத்துக்கள் பெறப்படும் என்றும், பெற்றுக் கொண்ட கையெழுத்துக்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்ப:ம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS