இந்தியா
Typography

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சீனாவில் இருந்து கேரளா வந்த மற்றொருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இதேவேளை சீனாவிலிருந்து இரண்டாவது ஏர் இந்தியா விமானம், 323 இந்தியர்களை ஏற்றியவாறு இன்று காலை டெல்லி வந்து சேர்ந்துள்ளது. அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும், சிறப்பு முகாம்களில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்