இந்தியா
Typography

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக டெல்லி செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக் கட்சி சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில், கடந்த சில மாதங்களாகவே அவர் பங்கேற்காதிருந்தார். இது தொடர்பான கேள்விகளுக்கு, அவர் ஓய்வில் இருப்பதாக கட்சி சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை, வழக்கமான பரிசோதனைக்களுக்கானதே என கட்சி வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS