இந்தியா
Typography

ஆந்திராவின் கிராமமொன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக, அச்சத்தில் அங்கு வாழும் மக்கள் வெளியேறியுள்ளனர்.  கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வாயு கசிந்து வருகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆந்திராவின் உப்பிடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கான பைப் லைனில் ஏற்பட்ட இந்த வாயுக்கசிவினை சரிசெய்வதற்கு நிபுணர்கள் தீவிரமாக முயற்சித்து வருவதாக அறியப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கேஸ் பைப் லைனில், புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தபோதே இகக் கசிவு ஏற்பட்டதாகவும், இதுபோன்ற கேஸ் கசிவு முன்பும் ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் எந் நேரத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே அக் கிராம மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்