இந்தியா
Typography

5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தேர்வுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன், பொதுமக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், அதிமுக அரசுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுட்பட பல்வேறு கட்சிகளும் அரசின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந் நிலையில் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவாக, தேர்வை ரத்து செய்யவும், பழைய நடைமுறையே தொடரவும், முடிவெடுத்து அறிவிக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS