இந்தியா
Typography

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு விதிக்கபட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தினால், வரும் 2021 ஜனவரி மாதம் அவர் சிறையிலிருந்து வெளிவரலாம் என சிறையதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு அபாரதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் சிறையில் கழிக்க நேரிடும் எனவும் அவர்கள் கூறியதாகத் தெரியவருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையில், சிறைத் தண்டனையுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

2017 பிப்ரவரி மாதத்திலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சிறையில் உள்ள இந்த மூவரும், இதுவரை அபராதத் தொகையை செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்