இந்தியா
Typography

அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தும், பாபர்மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்திற்கு நிலம் ஒதுக்க வேண்டும், இதற்கான அறக்கட்டளை பணிகள் மூன்று மாதங்களுக்குள் ‌அமைக்கப்பட வேண்டும், எனத் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாகவும், ‌அந்த அறக்கட்டளைக்கு ஸ்ரீஇராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உத்தர பிரதேச அரசு, அயோத்தி மாவட்டத்தில் சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. லக்னோ நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தன்னிபுர் கிராமத்தில் இந்த 5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இது அயோத்தியில் இருந்து 18 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற உத்தரப்பிரதேச அமைச்சரவை கூட்டத்தில், நிலம் ஒதுக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

இந்த அறிவித்தல்களின்படி, அயோத்தியில் இராமர்கோவில், பாபர்மசூதி, அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்