இந்தியா
Typography

வருமான வரித்துறையின் திடீர் சோதனைக்கு, நடிகர் விஜய், மற்றும் சினிமாவிற்கான நிதிக்கடன்கள் வழங்கும், பைனான்சியர் அன்புசெழியன், பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், ஆகியோரது அலுவலகங்கள், வீடுகள், மற்றும் சொந்தமான இடங்களில் , வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று ஆரம்பமான இச் சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று, நேற்றைய இரவிலும் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக  நீடிப்பதாகவும்  செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடீர்சோதனைக்காக, படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய், அங்கிருந்து நேற்று உடனடியாக அவரது வீட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டார். அவரது சாலிக்கிராம வீடு, அலுவலகம், மற்றும் இடங்களிலும் இச் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், மற்றும் அவர் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும், சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடந்திய இச் சோதனையில், கணக்கில் வராத சுமார் 65 கோடி பணத்தை வருமான வரி துறை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS