இந்தியா
Typography

நாளை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, இந்தியா வருகை தருகிறார். நான்கு நாட் பயணமாக வரும் அவருடன், இலங்கை அரசு சார்ந்த உயரதிகாரிகள் பத்துப் பேர் கொண்ட குழுவும் வருகை தருவதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டு பிரதமராகப் பொறுப் பேற்றுக் கொண்டதன் பின் இந்தியாவுக்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைகிறது.

இந்திய வரும் இலங்கைப் பிரதமர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இந்த விஜயத்தின் போது, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் அவர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனவும்,இலங்கை, இந்தியா, மாலைதீவு, ஆகிய நாடுகள் இணைந்த முத்தரப்பு கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு தொடர்பான ஆலோசனைகளாக அவை அமையும் எனவும் தெரியவருகிறது.

பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டதன் பின்னதாக, வாராணசி, சர்நாத் , புத்தகயா, திருப்பதி ஆகிய இடங்களுக்கு இலங்கைப் பிரதமர் ராஜபக்சே செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்