இந்தியா
Typography

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் இன்றைய முக்கிய பிரச்சினையான வேலையின்மை குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; மக்களவையில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் உரை மிக நீண்டதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு இடத்திற்கூட நாட்டின் வேலையின்மைப் பிரச்சனை குறித்த கருத்துக்கள் வரவில்லை.

அது போலவே மக்களவையில் பேசிய பிரதமர் மோடி அவர்களும், காங்கிரஸ் குறித்தும், நேரு குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பேசினார். ஆனால் நாட்டின் முக்கிய பிரச்சனையான வேலையின்மை தொடர்பில் எதுவும் பேசவில்லை. இதிலிருந்து முக்கிய பிரச்சினைகளிலிருந்து நாட்டை, மக்களை திசை திருப்புவதே அவரது நோக்கம் என்பது புரிகிறது எனக் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்