இந்தியா
Typography

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக அடுத்த பதற்றம் நெய்வேலியில் நிகழ்ந்திருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்னதாக விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனைகளுக்காக, நெய்வேலியில் நடைபெற்ற "மாஸ்டர்" படப்பிடிப்புத் தளத்திலிருந்து விஜய் இடைநடுவில் அழைத்து வரப்பட்டார்.

35 மணிநேரச் சோதனைகளை வருமானவரித்துறை முடித்துக்கொண்டதன் பின்னதாக, மீளவும் ' மாஸ்டர்' படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி என்எல்சி 2 வது சுரங்கப் பகுதிக்குச் சென்று, இன்று படப்பில் கலந்துகொண்டார் விஜய். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பாஜகவை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு, படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு எனப் போராட்டம் நடத்தினார்கள்.

கடும் கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு இறுக்கங்களும் உள்ள சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது எனக் கோரி, பாஜகவினர் போராட்டம் நடத்துவதை அறிந்த விஜய் ரசிகர்களும் அந்தப் பகுதியில் குழுமினார்கள். சம்பவமறிந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டார்கள்.

பாஜகவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அப்பகுதில் கூட, அப்பகுதியில் மிகுந்த பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியின் பாதுகாப்புக் கடமையிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைத்ததாகத' தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS