இந்தியா
Typography

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 70 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக நடைபெறும் இத் தேர்தலில், காலை முதல் வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

டெல்லி முதல் மந்திரியும், அம் ஆதமி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாக்கினை டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியிலமைந்துள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். வாக்களிப்பின் பின்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ வாக்காளர் அனைவரும் தங்கள் தவறாது தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

நாம் இதுவரை ஆற்றியிருக்கக் கூடிய பணிகளின் அடிப்படையில் டெல்லி வாக்காளர்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால் மூன்றாவது முறையாகவும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது” என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS