இந்தியா
Typography

'மாஸ்டர்' படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலி சுரங்கப் பகுதியில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் இன்று செய்தியாளர்களை, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சந்தித்தபோது, இது போன்ற செயல்களை பெஃப்சி அமைப்பு கண்டிக்கிறது எனத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; இது போன்ற நடவடிக்கைகள் தமிழகத்துக்கான வருமானத்தை, இங்குள்ள தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பினை பறிக்கிறது என்பது குறித்த புரிதல்கள் இல்லாமல் நடத்தப்படுவதாக அதிருப்தி தெரிவித்தார்.

அவர் மேமலும் கூறுகையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாதிரியான செயற்பாடுகளால் திரைப்படத் துறையில் பெரிய அளவில் பிரச்சினைகளும், மாற்றங்களும் வரக்கூடும் என்றார். இவ்வாறான சம்பவங்கள் படப்பிடிப்பை தமிழ்நாட்டுக்கு வெளியே கொண்டு சென்றுவிடும். இதனால் தமிழகத்துக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை யாரும் உணர்வதாக இல்லை.

25 ஆண்டுகளுக்கு முன்பு 'அரவிந்தன்' படத்தின் படப்பிடிப்பில் ஒருவர் காயமடைந்தார், எப்போது வந்து தகராறு பண்ணுவது? இதில் என்ன நியாயம் இருக்கிறது.

பெரிய ஹீரோக்களில் விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கிறது. ரஜினி, அஜித் உள்ளிட்ட நாயகர்கள் எல்லாம் வெளிமாநிலத்துக்கு ஷுட்டிங்கை மாற்றி விடுகிறார்கள்.

உதாரணத்துக்கு, சமீபத்தில் அஜித்தின் படத்திற்காக, தேனியில் உள்ள கோயிலை வெளி மாநிலத்தில் செட் போட்டு படமாக்கியுள்ளனர். அதில் ஒரு நாளைக்கு 2000 பேர் வரை பணிபுரிந்திருக்கிறார்கள். அதே படப்பிடிப்பு தேனியில் மட்டும் நடந்திருந்தால் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் தேனி மக்களுக்குக் கிடைத்திருக்கும். சென்னையில் நடந்திருந்தால் தொழிலாளர்கள் சம்பளம் மட்டும் 2 கோடி ரூபாய் வரை வந்திருக்கும். ஆனால் இப்போது அவையணைத்தும் வெளியே சென்றுள்ளது. இது யாருக்கு இழப்பு ? முறையற்ற போராட்டங்களும், செயல்களும், தமிழ் சினிமாவைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பது உணரப்படவேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 16 படங்களின் படப்பிடிப்பு நடந்த நெய்வேலிச் சுரங்கப் பகுதியில் இப்போது மட்டும் பிரச்சினை வருவது ஏன் ? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழ் சினிமா சிறிய பிரச்சனையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது. அதுபோலவே தேவையற்ற பொய் கணக்குகள் மூலம் திரைத்துறையை பெரிய துறையாகவும், காட்டப்படுவதால், கட்டுப்பாடுகள் இல்லாத துறையாக திரைப்படத்துறை மாறிவிட்டது. ஆகவே திரைப்படத்துறை மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். டிக்கெட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்