இந்தியா
Typography

நேற்றைய தினம் டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. நேற்று மாலை 6.00 மணிவரை நடைபெற்ற இந்த வாக்குப் பதிவில், சுமார் 53 வீதமான வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக மந்தமாக நடைபெற்றிருக்கும் இந்த வாக்குப் பதிவின் பின்னதாக, வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புக்களில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பாண்மை வெற்றி பெறும் என்றும், அக் கட்சி டெல்லியில் அடுத்த ஆட்சியை அமைக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மையாக 40 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடத்தையே பாஜக பிடிக்கும் எனவும் அக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்றைய தினம் வாக்குப் பதிவினைச் செய்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந் கெஜ்ரிவால் ஆத்மி மூன்றாவது தடவையாகவும் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS