இந்தியா
Typography

“இலங்கையின் நிலைபேண் தன்மை , பாதுகாப்பு மற்றும் அமைதி மாத்திரம் இந்தியாவின் ஈடுபாடு இல்லை. முழு இந்து சமுத்திரம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். எனவே, இந்து – பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு எமது கூட்டுறவு மிகவும் பெறுமதியானது.” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

“எமது அயலுறவு முதன்மையானது, கொள்கைகள் மற்றும் சமுத்திரக் கோட்பாடுகளுக்கு இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவோம். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இந்தியாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்தும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS