இந்தியா
Typography

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களில் எவரும் பாதிப்புறக் கூடாது. அவ்வாறு பாதிப்படைவதை உறுதி செய்ய முடியுமா? எனக் கூறியுள்ளார் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி.

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்த பின் இந்தியாவில் தஞ்சமடைந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் அட்டைகள் இல்லாமல் வாழும் மக்களுக்கே, மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்காகத்தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என சில கட்சிகள் சொல்லி வருகின்றன. காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல் நோக்கம் அது. அனைவருக்கும் குடியுரிமை என வாக்குறுதி வழங்கினால், வங்காளதேசத்திலிருந்து பாதிப் பேர் இந்தியாவுக்குள் வந்து விடுவார்கள். அப்படி வருபவர்களுடன் ஊடுருவல்காரர்களும் வந்து சேர்வார்கள். அப்படி வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்