இந்தியா
Typography

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளின் பின்னதாக, அவரது வீட்டிலிருந்து கைப்பற்ப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், விளக்கங்கள் பெறுவதற்காக இன்று நேரில் ஆஜராகுமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அறிய வருகிறது.

இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளதாகசும் தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க, விஜய் வீட்டல் நடைபெற்ற சோதனைகளின் பின்னதாக நெய்வேலி என்எல்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் பங்கேற்று வருகிறார். அங்கு பாஜக வினர் நடத்திய எதிர்ப்புக்களினால் பெருமளவில் குவிந்த முறுகல் நிலை, காவல்துறையின் தடியடியால் முடிவுக்கு வந்தது.

ஆனால் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் விஜயை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் கூடினர். இதனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பிலிருந்து வெளியே வந்த விஜய், கரவேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார் எனவும் தெரியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்