இந்தியா
Typography

காந்தக் குரலோன் என்று பெருமைக்குச் சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ். தமிழ் தொடங்கி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருடைய உடன்பிறந்த தம்பி கே.ஜே.ஜஸ்டின் (60). இவரைக் கடந்த ஒருவாரமாகக் காணவில்லைலை எனக் கூறப்பட்டது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் யேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது சடலத்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஜஸ்டின் தனது குடும்பத்தினருடன் வாடகை விட்டில் வசித்து வந்ததுடன் பெரும் பொருளாதார நெருக்கடிகளால் தவித்து வந்தார் என கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS