இந்தியா
Typography

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு என்பவற்றை முன்னிறுத்தி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் அடங்கலான காவிரி டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ரூ.1,022 கோடி மதிப்பில் சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா ஆகியவை நேற்று ,சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு பேசுகையிலேயே தமிழக முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, காவிரி டெல்லாப் பகுதி வாழ் மக்கள் பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தகது டுவிட்டர் செய்தியில், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க தனி சட்டம் இயற்றப்படும், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது அப்பகுதி விவசாயிகளுக்கு மிகு‌ந்த மகிழ்ச்சியளிக்கும் எனத் தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS