இந்தியா
Typography

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முன்முனை போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் வாக்கு எண்ணக்ககையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 54 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருவதால் 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால்முதலமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS