இந்தியா
Typography

டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருவதால் மீண்டும் டெல்லியில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி சுமார் 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது வாழ்த்துக்கள். வளர்ச்சித் திட்டங்கள் வகுப்புவாத அரசியலை முறியடிக்கிறது என்பது தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபணமாகிறது கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய நம்பிக்கைகள் நம் நாட்டில் பலப்படுத்தப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS