இந்தியா
Typography

சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். 

டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை வெளியான முடிவுகளில் 64 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 6 இடங்களில் பாஜகவும் முன்னிலையில் இருக்கின்றன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS