இந்தியா
Typography

டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், வரும் 16 ல் முதல்வராக பதவியேற்க உள்ளார். 

டில்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 3வது முறையாக டில்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இதற்காக அவரை கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்வதற்கான எம்எல்ஏ.,க்கள் கூட்டம் இன்று (பிப்.,12) மாலை நடக்க உள்ளது.

இந்நிலையில், கெஜ்ரிவால் வரும் 16இல் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த விழா ராம்லீலா மைதானத்தில் நடக்க உள்ளது. பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS