இந்தியா

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, “ பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள்.

ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று நான் கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும். ” என்றார்.

அடுத்து டெல்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு “கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” எனக் கூறிச் சென்றார் கமலஹாசன்